வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை

6 months ago 19

சென்னை,

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி மீண்டும் தனது நாட்டை பிடித்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் 228-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் விஜய் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article