நன்றி குங்குமம் தோழி
வெயில் காலம் வந்தால் பலருக்கு வேர்க்குரு தொந்தரவு தரும். இதிலிருந்து நிவாரணம் பெற சில டிப்ஸ்…
*வேர்க்குரு போக்க நுங்குத்தோல், சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வர உடல் உஷ்ணமும் குறையும்.
*துளசி, சந்தனம், மஞ்சள் இவற்றை அரைத்து உடம்பில் பூசி வர வேர்க்குரு கட்டிகள் ஆறிவிடும்.
*குளித்ததும் மருதாணி எண்ணெய் தடவிக் கொண்டால் வேர்க்குரு ஆறி, அரிப்பும் நிற்கும்.
*சாதம் வடித்த கஞ்சியை உடம்பில் தடவிக் கொண்டு சற்று நேரம் கழித்து குளித்தால் வேர்க்குரு நீங்கி விடும்.
*உடல் முழுவதும் தயிரைத் தடவி, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் வேர்க்குரு அரிப்பு நின்று விடும். புண் ஆறிவிடும்.
*குளிப்பதற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, அரிசி மாவு இவற்றை நீரில் கரைத்து தேய்த்துக் ெகாண்டால் வேர்க்குரு வராது. இருந்தாலும் நீங்கும்.
*வேப்ப இலையை சுத்தம் செய்து, நிழலில் உலர வைத்து பொடித்து வைத்துக் கொண்டு, உடம்புக்கு தேய்த்துக் கொண்டு குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வந்தாலும் போய்விடும்.
தொகுப்பு: எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.
The post வேர்க்குரு பிரச்னை தீர! appeared first on Dinakaran.