வேதாரண்யம், ஜன. 18: வேதாரண்யம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க 2025ம் ஆண்டிற்கான தலைவராக பெண் வழக்கறிஞர் உமா, செயலாளராக குமரவேல், பொருளாராக வீரகுமார், துணை தலைவராக மதியழகன், துணை செயலாளராக இராஜசேகரன், நூலகராக ராஜ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக மணிவண்ணன், மாதவன், பாலசுப்பிரமணியன் அறிவுச்செல்வன், பாரி, பாரதிராஜா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் வழக்கறிஞர் சங்கம் கடந்த 2009ம் ஆண்டு துவக்கப்பட்டது 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக பெண் வழக்கறிஞர் உமாதலைவராக பதவி ஏற்று கொண்டு உள்ளார். புதிதாக பொறுப்பேற்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலக சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
The post வேதாரண்யம் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.