வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய மியான்மர் படகு

4 months ago 17

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தில் மூங்கிலால் கட்டப்பட்ட படகு ஒன்று நேற்று காலை 8 மணியளவில் கரை ஒதுங்கி இருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள், வேதாரண்யம் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்ட 150 மூங்கில்களால் கட்டப்பட்டு இருந்தது.

மியன்மர் நாட்டை சேர்ந்த படகு என்று தெரிய வந்துள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட ஓலை கூரை ஒன்றும் இருந்தது. கோழி தீவனம் 2 மூட்டைகளில் 30 கிலோ இருந்தது. இதனையடுத்து படகை கைப்பற்றிய போலீசார், படகில் மியான்மர் மீனவர்கள் யாரும் வந்தார்களா? என விசாரிக்கின்றனர். இந்தநிலையில் வேதாரண்யம் சன்னதி கடலில் நேற்று காலை 300 அடி தூரத்துக்கு கடல்நீர் திடீரென உள்வாங்கியது.

The post வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய மியான்மர் படகு appeared first on Dinakaran.

Read Entire Article