வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது. ஒரு டன் உப்பு ₹2000 வரை விற்பனையாகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 4 மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவுற்று வெயில் காலம் தொடங்கியுள்ளதால் வேதாரண்யம் பகுதியில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகளும் நிறைவுற்று உப்பு வார் முதல் செய்யப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உப்பு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழக அரசு உப்பள பகுதிகளில் பாத்திகளில் புழுதி மண் அடிப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கி உள்ளது. பாத்திகளில் மண் அடித்தால் உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும். ஒரு சில ஆண்டுகளாக உப்பு பாத்திகளுக்கு புழுதி மண் எடுத்து போடுவதற்கு அனுமதி இல்லாத நிலையில் இந்த ஆண்டு மண் எடுத்து உப்பள பாத்திகளில் போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைக்கும் பணியில் அதிகாலை முதல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஒரு டன் உப்பு ₹1500 முதல் ₹2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம் appeared first on Dinakaran.