வேதாரண்யம், டிச.9: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 18 மையங்களில் துளிர்தேர்வில் 749 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற தேர்வில் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 749 மாணவ மாணவர்கள் ஜூனியர், சீனியர் , சூப்பர் சீனியர் துளிர் தேர்வு எழுதினர் வேதாரண்யம் ஒன்றியத்தில் வேதாரண்யம், பெரியகுத்தக்கை, தோப்புத்துறை, தேத்தாக்குடி வடக்கு , தெற்கு, மறைஞாயநல்லூர், ஆயக்காரன்புலம்.மருதூர் தெற்கு, பஞ்சநதிக்குளம் கிழக்கு ,மேற்கு, ராஜன்கட்டளை, வெள்ளிக்கிடங்கு, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், கருப்பங்காடு,கத்தரிப்புலம், கைலவனம்பேட்டை, நாகக்குடையான் மேற்கு உள்ளிட்ட18 மையகளில் தேர்வு நடை பெற்றது.
தேர்வை தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகப்பட்டினம் செயலாளர் பால.இரணியன், வேதாரண்யம் வட்டாரத் தலைவர் சித்திரவேலு, வானவில் கருத்தாளர்கள் விக்னேஸ்வரி, திருமாவளவன், மாங்கனி, சத்யராஜ் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நடத்தினர் அறிவியலில் மாணவர்களின்திறனை வளர்க்கும் இந்த தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசும், 50 பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்படும் எனஅறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார தலைவர் சித்திரவேல் தெரிவித்தார்.
The post வேதாரண்யத்தில் 18 மையங்களில் துளிர் தேர்வு 749 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.