வேட்டையன்: நடிகை ரோகிணியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

3 months ago 25

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, நடிகர் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், நடிகை அபிராமி மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டது.

படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை ரோகிணி 'நசீமா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Introducing @Rohinimolleti as NAZEEMA in VETTAIYAN ️ A pivotal role awaits, promising depth and intrigue. #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaranpic.twitter.com/1ySx10RzhQ

— Lyca Productions (@LycaProductions) September 28, 2024
Read Entire Article