வேகமாக வளர்ந்து வரும் பகுதியான பாவூர்சத்திரத்தில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும்: முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

3 months ago 7

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதி கல்வியிலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இவ்வட்டாரத்தில் உள்ள 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து முடித்து வெளிவரும் சுமார் 2500 மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்ந்து உயர் கல்வி பெறுவதற்கு ஏற்ற கலைக்கல்லூரி வசதிகள் இல்லை. இருக்கின்ற சில கல்லூரிகளில் சேர்வதற்கு சென்றாலும் அக்கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் சேர்ந்து விடுவதால்,

இப்பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காத நிலையும், இதனால் மேல்படிப்பு தடைபடும் நிலையும் உள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதி மாணவச் செல்வங்கள் பயன்பெறும் வகையில் பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலைக்கல்லூரி ஒன்றை உருவாக்கித் தர ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வேகமாக வளர்ந்து வரும் பகுதியான பாவூர்சத்திரத்தில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும்: முதல்வருக்கு வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article