வெஸ்பா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட வெஸ்பா 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் வெஸ்பா 125, எஸ் 125, டெக் 125 மற்றம் எஸ் டெக் 125 என்ற 4 வேரியண்ட்கள் உள்ளன. வெஸ்பா, தனது 125 சிசி மற்றும் 150 சிசி ஸ்கூட்டர் இன்ஜின்களின் திறனையும் மேம்படுத்தியுள்ளது. இதன்படி, 125 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 7,100 ஆர்பிஎம்-ல் 9.5 எச்பி பவரையும், 6,100 ஆர்பிஎம்-ல் 10.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வெஸ்பா டெக் மற்றும் வெஸ்பா எஸ்டெக் வேரியண்ட்களில் கீலெஸ் என்ட்ரி, 5 அங்குல டிஎப்டி, புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. துவக்க வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.1.32 லட்சம். டாப் வேரியண்ட்டான எஸ்டெக் சுமார் ரூ.1.96 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது துவக்க வேரியண்டுக்கும் டாப் வேரியண்டுக்கும் ரூ.64,000 விலை வித்தியாசம் உள்ளது. 7 வண்ணங்களில் கிடைக்கும்.
இதுபோல், வெஸ்பா 150 சிசி ஸ்கூட்டர் இன்ஜின் திறன் 11.4 எச்பி பவர் மற்றும் 11.66 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். முந்தைய இன்ஜின் திறனை விட கூடுதலாக 0.7 எச்பி பவர் மற்றும் 0.6 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
The post வெஸ்பா 125 ஸ்கூட்டர்கள் appeared first on Dinakaran.