வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்த வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - மார்க் டெய்லர்

1 week ago 8

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாம் கான்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுதியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அவருக்கான மாற்று வீரரை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால், தேர்வாளர்களும் இதற்காக அவ்வளவு முயற்சிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இலங்கை டெஸ்ட் தொடரின் போது டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக பயன்படுத்தினார்கள்.

ஆனால், அதற்கு முன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை எடுத்த சாம் கான்ஸ்டாஸ் இலங்கை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது உள்ள சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பு சாம் கான்ஸ்டாஸை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும், அவர் இன்னும் சாதாரணமான முறையில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் ஸ்டீவ் ஸ்மித் அந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் தேர்வாளர்களுக்கு இந்த முடிவை எடுப்பது கொஞ்சம் எளிதாகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, உஸ்மான் கவாஜா தொடக்க வீரராக சிறப்பாக செயல்படாதது. அவர் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவதில்லை, அதனால் அவர் தன்னை சரிசெய்ய வேண்டும் என சொல்ல விரும்புகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களாக அவரது சராசரி 34-ஆக உள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள மெதுவான பிட்சில் அவர் அடித்த 200 ரன்களை நீங்கள் எடுத்து விட்டால் அவரது சராசரி 25-ஆக தான் இருக்கும். அதேபோல் மார்னஸும் டாப் ஆர்டரில் ரன்களை சேர்ப்பதில்லை. மேலும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நாம் பிரச்சனைகளை சரிசெய்ய் வேண்டும். எனவே, சாம் கான்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article