வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

3 months ago 24

கொழும்பு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. முதலில் டி20 போட்டிகளும் அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

டி20 போட்டிகள் அனைத்தும் தம்புல்லாவிலும், ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரரான தினேஷ் சண்டிமால் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, காமிந்து மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, நுவான் துஷாரா, மதீஷா பதிரனா, பினுரு பெர்னாண்டோ, அஷிதா பெர்னாண்டோ.


Sri Lanka have named their squad for the T20Is against West Indies #SLvWIhttps://t.co/PQKwF3rVzx

— ICC (@ICC) October 9, 2024

Read Entire Article