வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி பெண் படுகாயம்

12 hours ago 3

குளச்சல், மே 3: வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் தோப்புவிளையை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மனைவி சொர்ணம் (70). இவர் சம்பவத்தன்று தனது மகளை திருமணம் செய்து கொடுத்த ஊரில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றார். பின்னர் அவர் ஊருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளிச்சந்தை – வெள்ளமோடி சாலையில் ஈசன்தங்கு பகுதியில் சொர்ணம் சாலையை கடக்க முயன்றார். அந்தசமயம் அந்த வழியாக வந்த பைக் சொர்ணம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளிச்சந்ைத போலீசார் பைக்கை ஓட்டி வந்த ஈசன்தங்கை சேர்ந்த சுயம்புலிங்கம் (45) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article