காத்மண்ட்: வெள்ளப்பெருக்கினால் நேபாளம்- சீனா இணைப்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டதில் 18 பேர் மாயமாகி உள்ளனர். சீனாவில் நேற்று முன்தினம் முதல் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அண்டை நாடான நேபாளத்தின் போத்தேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரசுவா மாவட்டத்தில் உள்ள நேபாளம் -சீனாவை இணைக்கும் நட்பு பாலம் என்று அழைக்கப்படும் மிடேரி பாலம் நேற்று அதிகாலை மழை வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டது. இதில் 6 சீனர்கள் உட்பட 18 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களும் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதனிடையே தாட்லிங் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
The post வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நேபாளம்- சீனா இணைப்பு பாலம்: 18 பேர் மாயம் appeared first on Dinakaran.