வெளியானது 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர்

2 hours ago 3

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. மேலும் இப்படம் வருகிற 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வண்டார்' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் 'வேட்டையன்' படத்திற்கு தணிக்கைக் குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Hunter Vantaar choodu da! VETTAIYAN ️ Trailer is OUT NOW. The hunt begins! ▶️ https://t.co/6p2YRkzL8Q#Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaranpic.twitter.com/ghfbcTjU0l

— Lyca Productions (@LycaProductions) October 2, 2024
Read Entire Article