சென்னை: தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களின் சிறப்புகளை வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் தெரிந்துகொள்ள ஏதுவாக வெளிமாநிலங்களில் உள்ள அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பேருந்து மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக “தமிழகத்தை கண்டு மகிழ்வோம் – 2024 (Discover Tamil Nadu-2024)\” என்ற சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா பயணத்தையொட்டி, சுற்றுலா துறை செயலாளர் சந்தரமோகன் சுற்றுலா பேருந்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
மாமல்லபுரம், தஞ்சாவூர், தாராசுரம், காரைக்குடி செட்டிநாடு, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கீழடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று பார்வையிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post வெளிமாநில சமூக ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல ஏற்பாடு appeared first on Dinakaran.