
முல்லான்பூர்,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முல்லான்பூரில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற 5 முறை சாம்பியனான சென்னை அணி முயற்சிக்கும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. 4 போட்டியிலும். 2-வது தான் பேட்டிங் செய்தது. இதனால் நாளை போட்டியிலாவது அணுகுமுறையை மாற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமை யிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.