வெறி நாய்களின் தாக்குதலால் பலியாகும் செம்மறி ஆடுகள் : பரண்களை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்க கோரிக்கை!!

1 week ago 5

கரூர் : வெறி நாய்களின் தாக்குதல் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து செம்மறி ஆடுகளை பாதுகாக்கும் வகையில் உயர்ப்பரண் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டார பகுதிகளில் கல்குவாரிகள் அதிகரித்து இருப்பதால், விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெறி நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி ஏராளமான ஆடுகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதாக கால்நடை விவசாயிகள் கவலையோடு தெரிவிகின்றன. இரவு நேரங்களில் மூங்கில் பட்டியைத் தாண்டி வரும் நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று விடும் நிகழ்வுகள் அதிகரித்து உள்ளதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். நாய்களின் தாக்குதல்களில் இருந்து ஆடுகளை பாதுகாப்பதற்காக தற்போது பரண் அமைக்கும் பணியை பெரிய அளவில் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் முன்னெடுத்து உள்ளனர்.

பரண் வளர்ப்புமுறையில் ஆடுகள் உயரமான பரண்களில் அடைக்கப்படுவதால் வெறி நாய்கள் மற்றும் நோய் தாக்குதளில் இருந்து பாதுகாக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பரண் வளர்க்கும் முறையில் ஆடுகளின் கழிவுககளை எளிதாக சேகரித்து உரமாக விற்பனை செய்வதால் வருமானம் அதிகரிப்பதாக கூறுகின்றனர். ஆனால் பரண் அமைக்க போதிய நிதி இன்றி சிறிய அளவில் செம்மறி ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். பரண் அமைக்கும் செலவு தங்களின் பொருளாதர சக்திக்கு மீறியது என்பதால் ஒன்றிய அரசும் மாநில அரசும் பரண்களை அமைக்க தங்களுக்கு எளிய முறையில் மானிய உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெறி நாய்களின் தாக்குதலால் பலியாகும் செம்மறி ஆடுகள் : பரண்களை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்க கோரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article