
லாஸ் ஏஞ்சல்ஸ்,
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கார்ல் எரிக் ரின்ச். இவர் நெட்பிளிக்ஸிடம் 'ஒயிட் ஹார்ஸ்' என்ற வெப் சீரிஸை இயக்குவதாக 22 மில்லியன் டாலர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்று இதுவரை ஒரு எபிசோட் கூட எடுக்காமல் இருந்திருக்கிறார்.
மேலும் , அந்த பணத்தை வைத்து சொகுசான கார்கள், கிரிப்டோகரன்ஸி முதலீடு, ஆடம்பரமான வீடுகளை வாங்கி செலவழித்துள்ளாதாக தெரிகிறது.
இந்நிலையில், 'ஒயிட் ஹார்ஸ்' என்ற வெப் சீரிஸை இயக்குவதாகக் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மோசடி செய்த புகாரில் ஹாலிவுட் இயக்குனர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.