வெ.இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

1 day ago 3

பர்மிங்காம்: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 400ரன் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் 82, பென் டக்கெட் 60, ஜோரூட் 57, கேப்டன் ஹாரி புரூக் 58, பட்லர் 37ரன் அடித்தனர். வெ.இண்டீஸ் பவுலிங்கில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட் எடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 26.2ஓவரில் 162ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 238ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. சாகிப் மஹ்மூத்,ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜேக்கப் பெத்தேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி வரும் 1ம் தேதி நடக்கிறது.

The post வெ.இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article