
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி வீராணம் ஏரி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் கந்தகுமரம் பகுதியில் படகு இல்லம் அமைக்கும் பணி இந்தாண்டு பணிகள் தொடங்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம்: வரட்டுப்பள்ளம் அணை, கெட்டி சமுத்திரம் ஏரியில், அந்நியூர் ஏரி ஆகியவற்றில் படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வரட்டுப்பள்ளம் அணை, கெட்டி சமுத்திரம் ஏரியில் நீர்வரத்து நிலையாக இல்லாததால் சாத்தியம் இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளதால் அந்தியூர் எரியில் படகு சேவை தொடங்க அரசு ஆவன செய்யும் என்று பதில் அளித்தார்.