சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டுத் தொகையை 3 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரி்ல் மலைக்கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் இழப்பீடாக வழங்கியது. பாக்கித்தொகை ரூ.3 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவில்லை. இந்த தொகையையும் வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.