வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

4 months ago 21

சென்னை: வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பத்திவிட்டுள்ளதாவது; ”

“வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.

அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!” – எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!

அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

The post வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article