'வீர தீர சூரன் 2' படத்தின் 2 நாள் வசூல் விவரம்

2 days ago 3

சென்னை,

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன் 2' படம் பல தடைகளை தாண்டி நேற்றுமுன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 3.25 கோடிவசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படம் இரண்டு நாளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் 2 நாட்களில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் இப்படத்தின் வசூல் மேல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article