வீதி மீறய வாகனங்கள் மீது வழக்கு

3 months ago 19

 

அவிநாசி, அக். 17: அவிநாசி-கோவை மெயின் ரோடு ஆட்டையாம்பாளையம் நால்ரோட்டிலும், அவிநாசி-மங்கலம் ரோட்டில் உள்ள நால்ரோட்டிலும் அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மன் தலைமையில் போலீஸ்-சப் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி மற்றும் கோவிந்தம்மாள் மற்றும் போலீசார் குழுவினர் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, விபத்துக்களை தடுக்கும் வகையிலும், குற்றங்களை தடுக்கும் வகையிலும், 100க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை தணிக்கை மேற்கொண்டனர். ஓவர் ஸ்பீடு, டிரைவிங், லைசென்சு, வாகன உரிமம் ஆகியன உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 50 வாகனங்களுக்கு வழக்கு பதிவுசெய்யப்பட்டன.

The post வீதி மீறய வாகனங்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article