வீட்டுவசதி வாரிய நிலத்தில் குடியிருப்போருக்கு 18,000 ஏக்கரை விடுவிக்கும் நடவடிக்கை தொடக்கம்: அமைச்சர் தகவல் 

5 months ago 36

சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ், 18 ஆயிரம் ஏக்கர் நிலம் படிப்படியாக விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியது: ''வீட்டுவசதி வாரியத்தால் நிறைய நிலங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திட்டங்களுக்காக நிலம் எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படாததால், திட்டங்கள் வரவி்ல்லை. நிலத்தை எடுக்கவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அந்த 4(1) நோட்டீஸ் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

Read Entire Article