வீட்டிற்குள் புகுந்த பாம்புகள்

3 months ago 25

திருவாடானை, அக். 5: திருவாடானை அருகே பறையனேந்தல் பகுதியில் சேவியர் என்பவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் லாவகமாகப் பிடித்து காட்டுப் பகுதிக்குள் கொண்டுபோய் விட்டுச்சென்றனர். இதேபோல் திருவாடானை அருகே தொண்டி – வேலாங்குடி பகுதியில் வசந்தகுமார் என்பவரது வீட்டிற்குள் புகுந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பையும் உயிருடன் பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டுச் சென்றனர்.

The post வீட்டிற்குள் புகுந்த பாம்புகள் appeared first on Dinakaran.

Read Entire Article