வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

3 months ago 18

 

பல்லடம், அக்.17: பல்லடம்-மங்கலம் ரோடு குமரன் வீதியைச் சேர்ந்தவர் அலாமான் (40). இவர் நேற்று முன்தினம் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்துக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு என்பவரது மகன் கலியபெருமாள் (25) என்பதும், வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article