வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுவனை கடத்த முயற்சி: போலீசில் தந்தை புகார்

3 months ago 20

பெரம்பூர்: பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் சவுகத் அலி (50), ராயப்பேட்டையில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். புளியந்தோப்பில் உள்ள தனியார் பள்ளியில் மகன் முகமது இத்தியாஸ் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன், கடந்த 30ம் தேதி காலை 10 மணிக்கு, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிறுவனை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி உள்ளனர். அப்போது அருகில் இருந்த மூதாட்டி முருகேஸ்வரி, நீங்கள் யார், ஏன் சிறுவனை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகிறீர்கள் எனக் கேட்டபோது, அவர்கள் சிறுவனை விட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தகவலை மூதாட்டி முருகேஸ்வரி சவுகத் அலியிடம் கூறியுள்ளார். இதுபற்றி நேற்று முன்தினம் மாலை சவுகத் அலி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகனை கடத்த முயன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுவனை கடத்த முயற்சி: போலீசில் தந்தை புகார் appeared first on Dinakaran.

Read Entire Article