வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

6 hours ago 2

சென்னை: “வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்” என சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Read Entire Article