வீடுகளில் ஈட்டி, வாள், திரிசூலம் வைத்திருக்க வேண்டும் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு

3 months ago 13

பாட்னா,

மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இந்து ஸ்வாபிமான் யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்கள் மத்தியில் பேசுகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதை எதிர்கொள்ள அவர்கள் ஒன்றுபட வேண்டும். ஒவ்வொரு இந்து கடவுளும், தெய்வமும் திரிசூலம், வாள் அல்லது ஈட்டியை ஏந்தியிருக்கிறது. அது புனிதம் மற்றும் வலிமையை குறிக்கிறது. எனவே உங்கள் வீடுகளில் ஈட்டி, வாள், திரிசூலம் ஆகியவற்றை வைத்திருக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவற்றை வீடடின் பூஜை அறையில் பிரதிஷ்டை செய்து வணங்குங்கள். தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக பயன்படுத்துங்கள்.

கிஷன்கஞ்சிற்கு வருவதற்கு முன்பு, நான் அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா ஆகிய மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் பல இந்துப் பெண்கள் லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் (இஸ்லாமுக்கு) மாறுகிறார்கள். அவர்களின் வலையில் விழத் தயாராக இல்லாத பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றவாளிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை.

இவ்வாறு கிரிராஜ் சிங் பேசினார்.

Read Entire Article