வீடியோ காலில் வரும் ஆபாச அழைப்புகள்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. எச்சரிக்கை

2 months ago 15

ஈரோடு,

சமீப காலங்களில் சமூக வலைதளங்கள் மூலமாக சைபர் கிரைம் எனப்படும் இணையவெளி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் வேலுமணி பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்களை காண்பித்து, அவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம் எனக் கூறி பல ஆண்களை ஏமாற்றி மோசடி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதே போல வீடியோ காலில் சில ஆபாச அழைப்புகள் வருவதாகவும், அதில் தோன்றும் பெண்களை பார்ப்பவர்களின் புகைப்படத்தை வைத்து மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் வேலுமணி தெரிவித்தார்.

அதே போல், போலீஸ் அதிகாரி என்று கூறி பலரை நூதனமாக மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடும் கும்பலிடமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசடிகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

Read Entire Article