விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 20

புதுடெல்லி ,

கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு சமீப நாட்களாக, எண்ணற்ற வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வருகின்றன.

நேற்று 32 விமானங்களுக்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன, டெல்லி - பிராங்பேர்ட், சிங்கப்பூர் - மும்பை, பாலி - டெல்லி, சிங்கப்பூர் - புனே மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் புனே - ஜோத்பூர், கோவா - அகமதாபாத், கோழிக்கோடு - சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

#BREAKING || விமானத்தில் செல்பவர்களை நடுங்கவிட்ட செய்தி#airline #thanthitv pic.twitter.com/7yxQ4QB6K1

— Thanthi TV (@ThanthiTV) October 20, 2024
Read Entire Article