விஷால் நடித்த 'மதகஜராஜா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

9 hours ago 3

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Innum galagalappaana moments are waiting for you on Jan 12 So ippo ve #MadhaGajaRaja ku tickets eh book pannidunga! GalattaGlimpsehttps://t.co/fTLOyxYSQX #MadhaGajaRajaFromJan12 Kings of Entertainment @VishalKOfficial #SundarC A @vijayantony musical @varusarath5pic.twitter.com/IYMjDJbnJ3

— Santhanam (@iamsanthanam) January 9, 2025
Read Entire Article