விழுப்புரம், ஜன. 30: விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் பூட்டி இருந்த பீரோவில் 12 பவுன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்(70). விவசாயி. இவரது வீட்டில் நேற்று பீரோவில் இருந்த நகைகள் திருடுபோனதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தாங்கள் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், பீரோவில் 12 பவுன் நகைகள் வைத்திருந்த நிலையில் இந்த நகைகள் திருடு போயிருந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெருமாள் வெளியில் சென்றிருந்தபோது வீடும், பீரோவும் பூட்டியிருந்துள்ளதும், பூட்டி இருந்த பீரோவுக்குள் 12 பவுன் நகை எப்படி திருட்டுப் போனது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு சந்தேகத்தின்பேரில் பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான தடையங்களை சேகரித்தும், கைரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விவசாயி வீட்டில் பூட்டியிருந்த பீரோவில் 12 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.