விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் மீது ஒருவர் சாணம் அடித்துக்கொள்ளும் விநோதத் திருவிழா..

2 weeks ago 5
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கும்டாபுரம் கிராமத்தில், பீரேஸ்வரர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக சாணியடித் திருவிழா நடைபெற்றது. சுவாமிக்கான பூஜை முடிந்ததும் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் வெற்று உடம்புடன், பசுவின் சாணத்தை உருண்டைகளாக்கி, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடினர். இதில் கர்நாடக மாநில மக்களும் பங்கேற்றனர். திருவிழா முடிந்ததும் இந்த சாணத்தை விவசாய நிலத்தில் எருவாகக் கலந்தால் பயிர்கள் செழிக்கும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விநோதத் திருவிழாவை வெளிநாட்டினர் வீடியோ பதிவு செய்துகொண்டனர்.
Read Entire Article