விவசாயத்திற்கான தனி பட்ஜெட் வேளாண் கூட்டமைப்பின் கருத்து பகிர்வு கூட்டம்

4 weeks ago 4

 

மதுரை, டிச. 16: தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், வேளாண் பட்ஜெட் குறித்த கருத்து பகிர்வு கூட்டம் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு 2021ம் ஆண்டு முதல் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. விவசாயத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை முன்னிறுத்தும் இந்த முயற்சிக்கு, விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். விவசாய பட்ஜெட் பற்றிய விவசாயிகளின் கருத்துக்களை, குறிப்பாக இயற்கை விவசாயிகளின் பார்வையிலிருந்து நிறைய பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

இதன்படி வரும் 2025-26ம் நிதியாண்டிற்கான விவசாய பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை உருவாக்க, மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மதுரையில் இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பிலான கருத்து பகிர்வு கூட்டம் காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. இதில் உழவர்களின் பிரச்னைகள் பற்றியும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தேவையான முக்கிய பரிந்துரைககள் குறித்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் வேளாண் கூட்டமைப்புகள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயத்திற்கான தனி பட்ஜெட் வேளாண் கூட்டமைப்பின் கருத்து பகிர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article