விவசாய பணிக்காக பழநி வந்தடைந்தது 1,305 மெ.டன் உரம்

1 month ago 12

பழநி: பழநி பகுதியில் விவசாய பணிகள் துவங்கியதையடுத்து ரயில் மூலம் 1,305 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது மழை பெய்ய துவங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். இதற்கிடையே உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பழநி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் உரங்கள் கொண்டு வரப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயிலில் 480 டன் யூரியா, டி.ஏ.பி 380 டன், காம்ப்ளக்ஸ் 320 டன், சூப்பர் பாஸ்பேட் 125 என 1305 டன் உரங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் ரயிலில் இருந்து தொழிலாளர்கள் மூலம் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post விவசாய பணிக்காக பழநி வந்தடைந்தது 1,305 மெ.டன் உரம் appeared first on Dinakaran.

Read Entire Article