*பிடிஓக்களுக்கு ஆட்சியர் ஷேக்அப்துல் ரகுமான் உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பிடிஓக்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடுகட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் முன்னேற்ற பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஷேக்அப்துல்ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சிதிட்டபணிகளின் முன்னேற்றம் குறித்தும்,
குடியிருப்பு வீடுகட்டும் திட்டங்களின்கீழ் நிலுவையிலுள்ள வீடுகளில் அனைத்திற்கும் அடுத்த ஆய்வுக்கூட்டத்திற்கு முன்னதாக முன்னேற்றம் காண்பிக்கப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு கடந்தவாரம் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரகவளர்ச்சிமுகமை அலுவலக கூட்டரங்கில் ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சிதுறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் முன்னேற்ற பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
அதன்படி கலைஞரின் கனவுஇல்லம், ஊரக வீடுகள் சீரமைப்புதிட்டம், பிஎம்ஜன்மன் பிரதம மந்திரி பழங்குடியினர் வீட்டுவசதிதிட்டம் போன்ற திட்டங்களின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நிலுவையில்உள்ள குடியிருப்புகள் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடங்கப்பட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து மறுஆய்வுமேற்கொள்ளப்பட்டது. மேலும் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டதை மறுஆய்வுமேற்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப பட்டியல்தொகையினை உடனடியாக விடுவித்திட வேண்டும்.
குடியிருப்புவீடுகள்கட்டுமானப்பணியினை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுமேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என ஆடசியர் தெரிவித்தார். இதில் ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல்ஆட்சியர் பத்மஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் எந்த நிலையில் இருக்கிறது கலைஞர் கனவு இல்லம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.