விழுப்புரம் ஊராட்சித் தலைவர் புகார்; விசாரணை நடைபெற்று வருகிறது.. ஆட்சியர் விளக்கம்

3 months ago 22

விழுப்புரம்: விழுப்புரம் ஊராட்சித் தலைவர் புகார் குறித்து, கூடுதல் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்; காவல்துறை விசாரணையும் நடக்கிறது என ஆட்சியர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்று அன்று சில நாளிதழ்கள் மற்றும் சில ஊடகங்களில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சித் தலைவர் தொடர்பான செய்தி வரப்பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆனாங்கூர் கிராம ஊராட்சியில் கடந்த 2021-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், பழங்குடியின இருளர் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று சங்கீதா க/பெ. ஏழுமலை, என்பவர் ஆனாங்கூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருகிறார். பதவியேற்ற நாள் முதல் ஊராட்சி மன்றத்தலைவரின் தலைமையில் பல்வேறு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஊராட்சி மன்றத்தலைவர் கொடியேற்றி வைத்துள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எவ்வித சாதிய பாகுபாடுகளும் இன்றி சமத்துவத்துடனே நிர்வாக நடைபெற்று வருகிறது. தற்போது ஊராட்சிமன்றத்தலைவர் அளித்த புகாரின் மீது விழுப்புரம் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணை மேலும், ஆனாங்கூர் ஊராட்சிமன்றத்தலைவரால் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரம் ஊராட்சித் தலைவர் புகார்; விசாரணை நடைபெற்று வருகிறது.. ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article