விழுப்புரம் அருகே உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

1 day ago 2

சென்னை,

பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை அகற்றும் பொருட்டு நேற்று (23.3.2025) மாலை அப்பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சமி என்பவரின் மகள் காயத்திரி (வயது 10) என்பவரின் தலையின் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article