விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

6 months ago 25

விழுப்புரம்,

பெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் விழுப்புரம் மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியுருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article