விழிப்புணர்வு கருத்தரங்கம்

4 weeks ago 6

ராமநாதபுரம், டிச.18: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. செய்யது அம்மான் அறக்கட்டளை மருந்துவமனையின் மருத்துவர் சானாஸ்பரூக் அப்துல்லா தொடங்கி வைத்தார். இயற்பியல் துறை பேராசிரியர் சம்பத் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, செய்யது அம்மாள் இன்னோவேஷன் மற்றும் இன்குபேசன் கவுன்சில் செயல் அதிகாரி முனைவர் கார்த்திக்கேயன் கலந்து கொண்டு, மத்திய மாநிலங்களில் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளித்து உதவிடும் நிறுவனங்களை எடுத்துக்காட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தொழில்துறைகளில் மேம்பட, பல புத்தாக்க தொழில்களை மாணவர்கள் தொடங்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனர். கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் தமிழழகன் நன்றியுரை வழங்கினார். உயிர்நுட்பவியல் துறைத்தலைவர் சிரிதர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகள் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.

The post விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article