விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

5 hours ago 4

மதுரை: விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் மாநில அளவில் பள்ளிகள் இடையிலான கபடி போட்டிக்கு அழைத்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தூத்துக்குடி அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கடந்த 2018-ல் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி 2021-ல் தீர்ப்பளித்தது.

Read Entire Article