விளாத்திக்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த அரசுப் பேருந்து

2 months ago 11
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பு கம்பியின் மீது மோதி அருகேயிருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பதினைந்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கோவில்பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து கழுகாசலபுரம் அருகே விபத்தில் சிக்கிய நிலையில் விளாத்திக்குளம் போலீசார் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் காயமடைந்துள்ளதால் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article