விளாத்திகுளம், அக். 26: விளாத்திகுளம் பேரூராட்சி, மதுரை சாலையில் உள்ள 1வது வார்டு அம்பாள் நகரில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்படுகிறது. இந்த பணிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ், விளாத்திகுளம் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post விளாத்திகுளத்தில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.