சென்னை: கர்நாடக மாநிலம் பெருங்களூருவைச் சேர்ந்தவர் சுமன் அஸ்வின் (22). இவர், 3ம் ஆண்டு பொறியியல் பட்டய கல்வி படித்து வருகிறார். இவர், விலங்குகள், இயற்கை வளம் வேட்டையாடுவது, தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக, அவர் பொறியியல் பட்டய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது செல்லப்பிராணியான ‘பைரவா’ என்ற பெயர் கொண்ட நாயை தன்னுடன் நாடு முழுவதும் பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் தனது பயணத்தை தொடங்கினார். நாயை தள்ளுவண்டியில் அமரவைத்துக்கொண்டு பயணம் செய்து வருகிறார். இதுவரை கர்நாடக, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 900 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
தனது பயணத்தை ஆந்திராவில் நிறைவு செய்து, நேற்று சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணிக்கு வருகை தந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சென்று கன்னியாகுமரி வரை செல்ல உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 கிமீ தூரம் பயணம் செய்து பொதுமக்களிடம் விலங்குகள், இயற்கை பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வாலிபரின் சமூக அக்கறையை பலரும் பாராட்டினர்.
The post விலங்குகள் பாதுகாப்பு குறித்து செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் பாதயாத்திரை: பெங்களூரு வாலிபருக்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.