
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விருத்தாசலம் புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
விருத்தாச்சலம் புறவழி சாலையில் பேருந்து நிலையம் அமைக்க வருவாய்த்துறை இடம் இருந்தால் அமைப்பதாகவும், அல்லது தனியாரிடமிருந்து நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விருத்தாசலம் பழைய பேருந்து நிலையம் புனரமைப்பு பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.