
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க தவறிய சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். இ.குமாரலிங்கபுரம் அருகே கடந்த 29-ம் தேதி நடந்த மணல் கொள்ளையை தடுக்க தவறியதாலும் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவியாளர் மற்றும் வேளாண் அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.