விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசு பதுக்கல்: 2 பேர் கைது

3 months ago 26

 

விருதுநகர், செப்.30: விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றாத காரணத்தால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விதிகளை பின்பற்றாத பட்டாசு தயாரிப்பு ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் ஆமத்தூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடையின் பின்புறம் தகர செட் அமைத்து அதில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆமத்தூர் போலீசில் எஸ்எஸ்ஐ வெங்கேடஷ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், தகர செட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து, ஆமத்தூரை சேர்ந்த ஜெயபிரகாஷ்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல் விருதுநகர் ஆமத்தூர் ரோட்டில் உள்ள மற்றொரு பட்டாசு கடையின் பிற்புறம் தகர செட் அமைத்து பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்த, சிவகாசி அருள்குமரன்(44) என்பவரை ஆமத்தூர் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசு பதுக்கல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article