கந்தர்வகோட்டை, ஜன. 18: விராலிப்பட்டி ஊராட்சியில் உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சியில் உள்ள நான்கு ரோடு பகுதியில் இருக்கும் உயர் மின் கோபுர விளக்கை மக்கள் பண்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் .
அனைத்து தெருக்களுக்கும் செல்லும் பிரதான பகுதி என்பதால் அதிக அளவில் மக்கள் போக்குவரத்து இருக்கும் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாககா மக்கள் கூறுகிறார்கள். ஆகையல் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த மின்விளக்கு கம்பத்தை மக்கள் பண்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
The post விராலிப்பட்டி ஊராட்சியில் உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.